Breaking

Tuesday, 6 March 2018

மகிந்த ராஜ­பக்­சவை, தலைமை அமைச்­ச­ராக்­கும் விருப்­பம் மக்­க­ளுக்கு மட்­டு­மல்ல எமக்­கும் உள்­ளது.!

முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­சவை, தலைமை அமைச்­ச­ராக்­கும் விருப்­பம் மக்­க­ளுக்கு மட்­டு­மல்ல எமக்­கும் உள்­ளது.
மகிந்த தரப்பை எம்­மு­டன் இணைத்­துக்­கொண்டு பய­ணிக்க முடி­யு­மா­யின் அத­னைச் செய்­ய­வேண்­டும். இவ்­வாறு ஐக்­கிய
மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் பொதுச்­செ­ய­லர் மகிந்த அம­ர­வீர தெரி­வித்­தார்.
வீரக்­கெட்­டிய பிர­தே­சத்­தில் மக்­கள் சந்­திப்­பில் நேற்­றுக் கலந்து கொண்ட போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
மக்­க­ளின் ஆத­ரவு முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வின் பக்­கம் மட்­டுமே சென்­றுள்­ளது. கடந்த தேர்­த­லில் வெற்­றிக் காற்று அவர்­கள் பக்­கம்­வீ­சி­யதை அனை­வ­ரும் அறி­வோம். அர­சாக நாம் பொறுப்­புக்­கூற வேண்­டும். அர­சின் பக்­க­மும் பல்­வேறு தவ­று­கள் இடம்­பெற்­றன. இந்­தத் தோல்வி ஒரே நேரத்­தில் இடம்­பெற்ற ஒன்­றல்ல.
கடந்த காலங்­க­ளில் அர­சின் அச­மந்த செயற்­பா­டு­களே இதற்­குக் கார­ண­மா­கும். கடந்த காலத்­தில் சில பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண­மு­டிந்­தும் அவற்­றைக் கருத்­திற் கொள்­ளாது தீர்­வு­க­ளைப் பற்றி சிந்­திக்­காது செயற்­பட்­டமை எமது தோல்­விக்கு பிர­தான கார­ண­மா­கும்.
முன்­னாள் அரச தலை­வர் மகிந்­தவை அவ­ம­திக்­கும் வகை­யில் சில மோச­மான கருத்­துக்­களை முன்­வைத்­தமை, அவ­ரது குடி­யு­ரிமை பறிக்­கப்­ப­டும், அவர் தண்­டிக்­கப்­ப­டு­வார் என்ற விமர்­ச­னங்­கள் என்று அனைத்­துமே எமக்குப் பாத­க­மாக அமைந்­து­விட்­டன.
இந்­தத் தாக்­கங்­கள் அனைத்­துமே சுதந்­தி­ரக் கட்­சி­யையே பாதித்­தன. கடந்த தேர்­த­லில் மக்­கள் மகிந்த ராஜ­பக்­ச­வின் அணிக்கு ஏன் வாக்­க­ளித்­த­னர் என்று கேட்­கும் போது தேர்­தல் முடிந்து அடுத்த நாளே அவர் தலைமை அமைச்­ச­ரா­வார்; என்ற நம்­பிக்­கை­யி­லேயே நாம் வாக்­க­ளித்­தோம் என்று மக்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.
மகிந்த ராஜ­பக்­சவை தலைமை அமைச்­சர் பொறுப்­புக்­குக் கொண்­டு­வர நாமும் விரும்­பு­கின்­றோம். மக்­க­ளின் விருப்­பம் மட்­டு­மல்ல எமது தரப்­பும் அத­னையே விரும்­பு­கின்­றது. அவரை எம்­மு­டன் இணைத்­துக்­கொண்டு செயற்­ப­டு­வ­தில் எம்­மத்­தி­யில் எதிர்ப்­பும் இல்லை.
அவரை தலைமை அமைச்­ச­ராக்க முடி­ய­வில்லை என்று நினைத்­த­வு­டன் வாக்­க­ளித்த மக்­க­ளும் அதி­ருப்­தி­யில் உள்­ள­னர். எம்­மால் எத­னை­யும் மக்­க­ளுக்குக் கூற முடி­யாது. அமை­தி­யா­கவே நாம் இருக்­க­வேண்­டி­யுள்­ளது என்­றார்.