Breaking

Friday, 16 March 2018

பாட­சா­லை சீருடை வவுச்­சர்­களில் மோசடி!

கிளி­நொச்சி மாவட்­டத்­தில் உள்ள ஒரு பாட­சா­லை­யில் இந்த வருட கல்­வி­யாண்­டுக்­கான சீருடை மற்­றும் சப்­பாத்­துக்­கான வவுச்­சர்­கள் நேர­டி­யாக மாண­வர்­க­ளி­டம் கைய­ளிக்­கப்­ப­ட­வில்லை. பாட­சாலை அதி­பர் மட்­டத்­தி­
லேயே அனைத்து வவுச்­சர்­க­ளும் கையா­ளப்­பட்­டன.

இதன்­போது பல்­வேறு மோச­டி­கள் இடம்­பெற்­றுள்­ளன எனக் குற்­றம்­சாட்­டப்­பட்டு அந்­தப் பாட­சாலை மாண­வர்­க­ளின் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. பெற்­றோர்­க­ளால் கல்­வித்­தி­ணைக்­க­ளத்­தி­லும், மாவட்ட கணக்­காய்­வுப் பகு­தி­யி­லும் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

பெற்­றோர்­கள் கையெ­ழுத்­திட்ட கடி­த­மும் அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளது. அக்­க­டி­தத்­தில் தெரி­விக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­வது: பாட­சாலை மாண­வர்­க­ளின் சப்­பாத்­துக் கொள்­வ­ன­வுக்­காக வவுச்­சர்­கள் வழங்­கப்­பட்­டன.

இந்த வவுச்­சர்­கள் ஒவ்­வொன்­றும் 1400 மற்­றும் 1500 ரூபா பெறு­மதி கொண்­டவை. இதன்­மூ­லம் மாண­வர்­கள் தர­மான சப்­பாத்­துக்­களை கொள்­வ­னவு செய்­ய­மு­டி­யும். மீத­மா­கும் தொகை­யில் உப­ரிப் பொருள்­க­ளை­யும் வாங்­க­மு­டி­யும். ஆனால் குறித்த பாட­சாலை அதி­பர் வவுச்­சர்­களை மாண­வர்­க­ளி­டம் வழங்­க­வில்லை.

மாறாக கடை ஒன்­றில் சப்­பாத்­து­க­ளைக் கொள்­வ­னவு செய்து பாட­சா­லை­யில் வைத்து அவற்றை வழங்­கி­யுள்­ளார். அந்த சப்­பாத்­து­க­ளின் பெறு­மதி சுமார் 900 ரூபா மதிக்­கத்­தக்­க­தா­கும். அவ்­வாறு வழங்­கப்­பட்ட சப்­பாத்­து­கள் தரத்­தில் குறைந்­தவை.

அள­வில் மாறு­பட்­டுக் காணப்­ப­டு­கின்­றன. பல மாண­வர்­கள் அவற்றை அணிந்­து­செல்ல முடி­யாத நிலை­யில் இருக்­கின்­ற­னர். அத்­து­டன் சப்­பாத்­தின் பெறு­மதி போக எஞ்­சக்­கூ­டிய சுமார் 500 ரூபா வரை­யான பணமோ அல்­லது அதற்­கான உப­ரிப் பொருள்­களோ வழங்­கப்­ப­ட­வில்லை.

இது ஒரு மோச­டி­யான செயல். இதே­போன்று சீருடை வவுச்­ச­ரி­லும் மோசடி இடம்­பெற்­றுள்­ளது. வவுச்­சர்­கள் மாண­வர்­க­ளி­டம் வழங்­கப்­ப­ட­வில்லை. அதி­ப­ரின் ஏற்­பாட்­டில், குறிப்­பிட்ட கடை­யொன்­றில் தைக்­கப்­பட்ட சீரு­டை­களே வழங்­கப்­பட்­டுள்­ளன. தையல் கூலி­யாக 100ரூபா பெறப்­பட்­டுள்­ளது.

எனி­னும் சீரு­டை­கள் தரம் குறைந்த துணி­யில் நேர்த்தி இல்­லா­மல் தைக்­கப்­பட்­டுள்­ளன. அவற்றை நீண்­ட­கா­லம் பயன்­ப­டுத்த முடி­யாது. சரி­யான அள­வு­க­ளி­லும் தைக்­கப்­ப­ட­வில்லை.

இந்­த­வ­ரு­டத்­தில் பாட­சா­லை­கள் ஆரம்­பிக்­கப்­பட்டு மூன்று மாதங்­கள் ஆகும் நிலை­யில் இன்­ன­மும் பல மாண­வர்­க­ளுக்கு சீரு­டை­கள் கிட்­ட­வில்லை. வவுச்­சர்­கள் மாண­வர்­க­ளி­டம் வழங்­கப்­பட்­டி­ருப்­பின் அவர்­கள் உரிய நேரத்­தில் தமக்­கேற்ற வகை­யில் தர­மான சீரு­டை­க­ளைக் கொள்­வ­னவு செய்­தி­ருக்க முடி­யும். இவை மாத்­தி­ர­மின்றி இந்­தப் பாட­சா­லை­யில் மேலும் பல்­வேறு முறை­கே­டு­கள் இடம்­பெ­று­கின்­றன.

அதி­பர் எதேச்­ச­தி­கா­ர­மா­கச் செயற்­ப­டு­கின்­றார். அவ­ருக்கு உடந்­தை­யா­கச் சிலர் இருக்­கின்­ற­னர். விளை­யாட்­டுப் போட்டி என்ற பேரில் ஒவ்­வொரு மாண­வர்­க­ளி­ட­மும் 500 ரூபா அற­வி­டப்­பட்­டது. ஆனால் அதற்­கான பற்­றுச்­சீட்­டு­கள் தரப்­ப­ட­வில்லை. பல மாண­வர்­க­ளுக்கு பரி­சில்­க­ளும் வழங்­கப்­ப­ட­வில்லை.

பாட­சா­லைக்கு கம்­பி­வேலி அமைப்­ப­துக்­கென்­றும் மாண­வர்­க­ளி­டம் தலா ஆயி­ரம் ரூபா வசூ­லிக்­கப்­பட்­டது. இவ்­வா­றான செயற்­பா­டு­க­ளால் மாண­வர்­கள் நேர­டி­யா­கப் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர். பாட­சாலை அபி­வி­ருத்­தி­யி­லும் இது பெரி­தும் தாக்­கத்தை செலுத்­து­கின்­றது. எனவே அதி­கா­ரி­கள் இது­தொ­டர்­பில் உரிய நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும்.

இது தொடர்­பாக கிளி­நொச்சி கணக்­காய்­வுப் பகு­தி­யு­டன் தொடர்­பு­கொண்டு கேட்­ட­போது முறைப்­பாடு கிடைத்­துள்­ளமை உறு­தி­செய்­யப்­பட்­டது. ‘பாட­சாலை பொதுக்­கூட்­டத்­தில் எடுக்­கப்­பட்ட முடி­வு­க­ளுக்­க­மைய பெற்­றோர் சம்­ம­தத்­து­டன் நாம் சில செயற்­பா­டு­களை மேற்­கொண்­டோம்.

கணக்­காய்­வுப் பகு­தி­யால் இது­தொ­டர்­பில் உரிய ஆவ­ணங்­கள் கோரப்­பட்­டன. அவற்றை நாம் கைய­ளித்­தி­ருக்­கின்­றோம். அதி­கா­ரி­க­ளின் செயற்­பா­டு­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­வோம். இதன் பின்­ன­ணி­யில் என்­மீது காழ்ப்­பு­ணர்ச்சி கொண்ட சிலர் இருக்­கின்­ற­னர் என்றே கரு­து­கின்­றேன்’ என்று பாட­சாலை அதி­பர் தெரி­வித்­தார்.