Breaking

Tuesday, 6 March 2018

ஜிந்துப்பிட்டி ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தின் பாற்குட பவனி!

கொழும்பு - ஜிந்துப்பிட்டி அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தின் பாற்குட பவனி சிறப்பாக இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு நேற்று நடைபெற்றள்ளது. இதன்போது விசேட பூஜைகளும்
நடத்தப்பட்டுள்ளன. அத்துடன், 1ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய திருவிழாவில் நேற்றைய தினம் பாற்குட பவனி இடம்பெற்றுள்ளது. இதன்போது, ஏராளமான பக்தர்கள் பாற்குடத்துடன் கோவிலை வலம் வந்துள்ளனர். மேலும், இந்த நிகழ்வில் இறையடியார்கள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ கண்ணகி அம்மனின் அருளை பெற்றுக் கொண்டுள்ளனர்.