Breaking

Wednesday, 7 March 2018

இலங்கை அணி 5 விக்கற்றுக்களால் வெற்றி!

சுதந்திர வெற்றிக்கிண்ண ரீ-ட்வென்ரி சுற்றுத்தொடரின் முதலாவது போட்டியில்   இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.
 
சுதந்திர வெற்றிக்கிண்ண ரீ-ட்வென்ரி சுற்றுத்தொடரின் முதலாவது போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு  ஆரம்பமானது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.3   ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து  வெற்றிபெற்றது.