Breaking

Monday, 5 March 2018

மட்டக்களப்பு சித்தாண்டியில்3பாடசாலை மாணவர்கள் வீதி விபத்தில் படுகாயம்!

மட்டக்களப்பு, கொழும்பு நெடுஞ்சாலை சித்தாண்டியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 3 பாடசாலை மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.வந்தாறுமூலை
மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்னாலுள்ள பிரதான நெடுஞ்சாலையை மாணவர்கள் கடக்க முற்பட்ட போது அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் இந்த மாணவர்கள் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
குறித்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் கற்கும் 11 வயது மற்றும் 14 வயதுடைய இரு மாணவிகளும் ஒரு சிறுவனும் படுகாயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, மோட்டார் சைக்கிள் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், படுகாயங்களுக்குள்ளான அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.