Breaking

Saturday, 17 February 2018

முல்லைத்தீவில் நெற்செய்கை மோசமாக பாதிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் கடுமையான வறட்சி காரணமானக 298 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதுடன் 98 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் கடுமையான வறட்சி காரணமாக காலபோக செய்கைகள் அழிவடைந்துள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு, நட்டாங்கண்டல், எருவில் உழுவனரி ஆகிய குளங்களில் நீர் வற்றியதால் மேற்படி மூன்று குளங்களின் நீர் பயன்பாட்டை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட கால போக நெற்செய்கையே இவ்வாறு அழிவடைந்துள்ளன. இது தொடர்பில் பாண்டியன் குளம் கமநல சேவை நிலையத்தின் அலுவலர் தெரிவிக்கையில், ‘பாண்டியன் குளம் கமநலசேவை நிலையத்தின் கீழ் உள்ள சிறிய மற்றும் நடுத்தர குளங்களின் கீழான மானாவாரி நிலங்களில் காலபோக நெற்செய்கைகளில் இரண்டாயிரம் ஏக்கர் வரையில் அழிவடைந்துள்ளது. இதில் நட்டாங்கண்டல் குளத்தின் கீழ் 119 ஏக்கர் நெற்செய்கையும், எருவில் குளத்தின் கீழ் 94 ஏக்கர் நெற்செய்கையும் மற்றும் உழுவனரி குளத்தின் கீழ் 85.5 ஏக்கர் நெற்செய்கையுமாக மொத்தம் 298.5 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதுடன், 98 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என குறித்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.