Breaking

Sunday, 18 February 2018

‘ஜெலட்னைட்’ வெடிபொருட்களை வைத்திருந்த ஐவருக்கு விளக்கமறியல்!

திருகோணமலை லங்கா பட்டினம் பகுதியில் வெடிக்கவைப்பதற்காக தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த ஜெலட்னைட் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட ஐந்துபேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்ட கடற்றொழில் நீரியல் வளாத்துறைத் திணைக்களம் மற்றும் இலங்கை கடற்படையினர் இணைந்து நேற்று நடத்திய சோதனை நடவடிக்கையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடம் விசாரணை நடத்திய பொலிஸார், இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தனர். அதனைத் தொடர்ந்து ஐவரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இவர்களிடம் இருந்து 2 ஜெலட்னைட் வெடிபொருட்களுடன் 49 ஜெலட்னைட் கூறுகள், டெட்டினேட்டர்கள் 9, ஒக்சிஜன் சிலின்டர்கள் 5 உட்பட நீச்சல் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டிருந்தன. அவை அனைத்தும் திருகோணமலை மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.