Breaking

Saturday, 17 February 2018

காவிரிநீர் குறைத்தது ஏமாற்றம் அளிக்கிறது!

உச்சநீதிமன்றம் 192 டிஎம்சி தண்ணிரை 177.25 ஆக குறைத்து வழங்கி இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அவர் வெளியிட்ட
அறிக்கை: நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையைச் செயல்படுத்துவதற்கு ஆறு வார காலத்திற்குள் ஒரு செயல் திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது தமழக அரசின் நிலைபாட்டிற்கு கிடைத்த பெரும் வெற்றியாகும். பன்மாநில நதிகள் தேசிய சொத்து.  எந்த ஒரு மாநிலமும் தனி உரிமை கோர இயலாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மீண்டும் இத்தீர்ப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.  இது வரவேற்கத்தக்கது.
* 1892 மற்றும் 1924ஆம் ஆண்டைய ஒப்பந்தங்கள் செல்லத்தக்கதல்ல என்ற கர்நாடகாவின் வாதம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை;  
* காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிடப்பட்ட தமிழ்நாட்டில் காவேரி வடிநிலத்தில் உள்ள பாசனப் பரப்பான 24.708 லட்சம் ஏக்கர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  நீர்ப்பாசன பரப்பு மற்றும் நீர்த்தேவைகளை நடுவர் மன்ற தீர்ப்பின்படியே உச்சநீதிமன்றமும் தனது ஆணையில் உறுதிப்படுத்தியுள்ளது.
* தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் தேவைக்காக அளிக்கப்பட்டுள்ள 10 டிஎம்சி அடி நீர் அளவு சரியானது என ஏற்கப்பட்டுள்ளது.
* உச்ச நீதிமன்றம் தற்போது பிறப்பித்த ஆணைக்கு ஏதும் பாதகம் இல்லாமல், காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணைப்படி, மாதாந்திர வாரியாக 15 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டிற்கு நீர் வழங்கப்பட வேண்டும் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.    
நிலத்தடி நீரை கணக்கில் எடுத்துக்கொண்டு பில்லிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய
192 டிஎம்சி அடி நீரை 177.25 டிஎம்சி அடியாக குறைத்துள்ளது ஏமாற்றமளிக்கிறது.
காவிரி நதி நீரினை முழுமையாக பெறவும், சட்ட வல்லுநர்களின் ஆலோசனையைப் பெற்று, தேவையான தொடர் நடவடிக்கைகளை விரைவாகவும், உறுதியாகவும் எடுக்கும் என தெரிவித்துக் கொள்கிறேன்.