Breaking

Wednesday, 21 February 2018

"சமூக விழிப்புணர்வு கோரிக்கை பயணம்"

எமது அடுத்த பயணத்தை மார்ச் 1 ம் திகதி ஆரம்பிக்க இருக்கிறோம். இலங்கையில் உள்ள அதி உயரமான மலையான
பீதுருதாலகால மலைச்சிகரம் ஏறவுள்ளோம். கடல் மட்டத்தில் இருந்து 2524 மீற்றர் உயரம் மிக்க மலைச்சிகமாகும். பயண நோக்கம் இலங்கயில் கல்விபயிலும் அனைத்து மாணவர்களின் நலனையும் கருத்திற் கொண்டு, இன மத மொழி பாகுபாடு இன்றி அனைத்து மாணவர்களும் பாடசாலை செல்வதற்கு "இலவச பஸ் போக்குவரத்துச் சேவையை" அரசாங்கம் வழங்க வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து, எதிர்வரும் மார்ச் மாதம் 1 ம் திகதி, வவுனியாவில் இருந்து மோட்டார் வண்டியில், நுவரெலியாவில் அமைந்துள்ள, பீதுருதாலகால மலைச்சிகரம் ஏறி, திரும்பும் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளோம். இலங்கையில் இலவச கல்வி, இலவச பாடப்புத்தகம், கொப்பி பென்சில் சப்பாத்து, இலவச சீருடை, இலவச மதிய உணவு என்பனவற்றை வழங்கிவரும் அரசாங்கம், பாடடாலைச் சீருடையுடன் பஸ்ஸில் செல்லும் போது எதுவித கட்டணமும் அறவிடாமல் இலவசமாக போக்குவரத்துச் செய்வதற்கு, கல்வி அமைச்சும், அரசாங்கமும் நடவடிகை எடுத்து வறிய மாணவர்களின் கல்விக்கு உதவிபுரியவேண்டுமென்று இருகரம் கூப்பி வேண்டுகிறோம். தாய், தந்தையை இழந்து வறுமையிலும் கல்விபயின்றுவரும் வறிய மாணவர்களின் ஏழ்மையை உணர்ந்து, இம் மாணவர்களின் நலனுக்காக அரசாங்கம் நல்லதோர் முடிவை எடுத்த, இதனை அமுல்ப்படுத்த வேண்டுமென இப்பயணத்தின் வாயிலாக வேண்டி நிற்கிறோம். அன்புடன் தர்மலிங்கம் பிரதாபன் #21.02.2018