Breaking

Sunday, 18 February 2018

ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரியுடன் இரகசிய சந்திப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான  பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண
ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன்  இரகசிய சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட கூட்டம் ஒன்று கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ள நிலையில், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் அதில் கலந்துகொள்ளாமல் ஜனாதிபதியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகி தனியான ஆட்சி அமைப்பதற்கு இரண்டு பிரதான கட்சிகளும் முயற்சித்து வருகின்றன. அதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக் கொள்வதற்காக  பல்வேறு பேச்சுவார்த்தைகளை இரண்டு பிரதான கட்சிகளும் மேற்கொண்டு வருகின்ற நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.