Breaking

Saturday, 17 February 2018

சீன முதலீடுகளுக்கு இலங்கை அரசாங்கம் ஆதரவு!

சீன முதலீடுகளுக்கும், முதலீட்டுத் திட்டங்களுக்கும் இலங்கை அரசாங்கம் ஆதரவு வழங்க உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தகவலை சீன நாளிதழான சைனா டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் சீன தூதுவர் இற்கும் இடையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகம், தொழில் வலயங்கள் உள்ளிட்ட சீன முதலீடுகளுக்கு அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கும் என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளதாக சைனா டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.