Breaking

Saturday, 17 February 2018

மட்டக்களப்பில் இரத்ததான நிகழ்வு : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின் இரத்த வகைகளுக்கான தட்டுப்பாட்டை நிவர்த்திசெய்யும் வகையில் இன்று (சனிக்கிழமை) இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதில், இளைஞர்கள், பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என நூற்றுக் கணக்கானோர் கலந்துகொண்டு இரத்தத்தை தானம் வழங்கினர். மட்டக்களப்பு இரத்த வங்கியுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த இரத்ததான முகாமில் மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், கொழும்பு நாரஹேன்பிட்டி பிரதான இரத்த வங்கியின் பணிப்பாளர் டாக்டர் ருக்ஷான் பெல்லன, மட்டக்களப்பு போதான வைத்தியசாலைப் பணிப்பாளர் இப்பிறாலெப்பை, மாவட்ட உதவிப் பொலிஸ்மா அதிபர் யாகொட ஆராச்சி மற்றும் அரசாங்க அதிகாரிகள் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.