Breaking

Wednesday, 28 February 2018

தன்னம்பிக்கை மட்டுமே..!

உடலோடு உள்ளமும்
சோர்ந்து போனது
இரவெல்லாம் பகலாகிப் போனது
கனவெல்லாம் கலைந்து போனது
நீ உரைத்த வார்த்தை என் இதயத்தை
எரித்துப் போனது...!!



நான் உனக்கென்பதும்
நீ எனக்கென்பதும்
நீர்மேல் எழுத்தாகிப் போனது..!!

விதி மேலே பழி சொல்வதா
இல்லை வாழ்க்கையை நொந்து கொள்வதா
எல்லாம் நான் செய்த பாவமா
முற்பிறப்பின் வினைகளா இவை

சோர்ந்து போகாத
தன்னம்பிக்கை மட்டுமே
என் வாழ்வோடு
பவணி வருகிறது

எனை வதைத்து என் வலிகண்டு
ரசித்த என் உறவுகள் முன்னே
நிலவாக நான்
என்றும் உலா வருவேன்
என்னை பழித்தவரை..!

பழிதீர்க்க மாட்டேன்
வதைத்தவரையும் மீள்
 வதம் செய்ய மாட்டேன்..!
காயங்கள் பல கடந்தும்
வென்று நான் வாழ்வேன்..!

 <strong>நன்றி
  நிலா
  27.02.2018</strong>