Breaking

Sunday, 18 February 2018

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் முன்­னாள் போராளியை நாடு கடத்­தப்­ப­டு­வ­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்து போராட்டம்!

தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் முன்­னாள் போராளி ஒரு­வர் இலங்­கைக்கு நாடு கடத்­தப்­ப­டு­வ­தற்கு எதிர்ப்புத் தெரி­
வித்து ஆஸ்­தி­ரே­லி­யா­வின் மெல்­பேர்ண் புற­ந­கர்ப் பகு­தி­யில் போராட்டம் ஒன்றினை நடத்தி உள்ளனர்.. தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பில் கடற்­பு­லி­க­ளின் பட­கு­கள் கட்­டு­மா­னப் பிரி­வில் முக்­கிய உறுப்­பி­ன­ராக இருந்த சாந்­த­ரூ­பன் ஆஸ்­தி­ரே­லி­யா­வில் இருந்து நாடு­க­டத்­தப்­ப­ட­வுள்­ளார். எதிர்­வ­ரும் 22ஆம் திகதி இலங்­கைக்கு நாடு கடத்­தப்­ப­ட­வுள்­ளார். இவ­ரது புக­லிடக் கோரிக்­கையை ஆஸ்­தி­ரே­லிய அரசு நிரா­க­ரித்­துள்ள நிலை­யில், அவர் தற்­போது நாடு­க­டத்­தலை எதிர்­நோக்­கி­யுள்­ளார். சாந்­த­ரூ­பன் நாடு கடத்­தப்­ப­டு­வ­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்து புலம்­பெ­யர் தமி­ழர்­கள் உள்­ள­டங்­க­லாக பலர் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். சாந்­த­ரூ­ப­னு­டன் ஏனைய தமி­ழர்­க­ளும் நாடு கடத்­தப்­ப­டக்­கூ­டும் என்று ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­வர்­கள் கூறி­னர். பாது­காப்பு நுழை­வி­சைவு மறுக்­கப்­பட்ட ஆயி­ரத்து 400 தமி­ழர்­கள் தற்­போது நாடு கடத்­தப்­ப­டும் ஆபத்தை எதிர்­நோக்­கி­யுள்­ளார்­கள் என்று ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­வர்­கள் தெரி­வித்தனர்.