Breaking

Tuesday, 27 February 2018

இலங்கை அரசாங்கத்தை காப்பதற்காகவே தமிழ்தேசிய கூட்டமைப்பினர் ஜெனீவா செல்லவுள்ளனர்

தமிழ்தேசிய கூட்டமைப்பினர் ஜெனீவா செல்வதற்கு இரு காரணங்கள் உள்ளன அதில் முதலாவது  இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றுவது என அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டாவதாக ஜெனீவாவிற்கு சென்று  தமிழருக்கு நியாயம் கோரியதா பொய் கூறி வடக்குகிழக்கில் இழந்த வாக்கு வங்கியை  மீண்டும் பெற முயலும்; நோக்கத்துடன் அவர்கள் செயற்படுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்தேசிய கூட்டமைப்பு மிக முக்கியமான காலகட்டத்தில் கூட ஜெனீவாவிற்கு தனது பிரதிநிதிகளை அனுப்பியதில்லை இந்;நிலையில் எல்லாவற்றையும் மேற்கொள்ளும் கட்சியின் வெளிவிவகார செயலாளர் தற்போது வெளிநாடு சென்று வந்ததாக செய்தி வெளியாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் கூட்டமைப்பை சேர்ந்த சிலர்  ஜெனீவா செல்ல தயாராகிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது இவர்கள் அங்கு போய்  எதுவும் செய்யப்போவதில்லை ஜெனீவாவை பார்த்துவிட்டு வரப்போகின்றார்கள் இழந்த வாக்குவங்கியை மீண்டும் சரிக்கட்ட முயல்கின்றனர் எனவும் சுரேஸ்பிரேமசந்திரன்  தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் உறுதியளித்ததை செய்யவேண்டும் என்ற அழுத்தத்தை கொடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்வதன் மூலம் கூட்டமைப்பு அதனை காப்பாற்ற போகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்