Breaking

Thursday, 22 February 2018

சிரியப் போரில் சிதறிய ஈழத்தமிழரின் முக்கிய சாட்சி தமிழினம் இழந்து இன்றுடன்6வருடங்கள் நினைவு அஞ்சலி!

சிரியப் போரில் சிதறிய ஈழத்தமிழரின் முக்கிய சாட்சி: தமிழினம் இழந்து இன்றுடன் 6 வருடங்கள்… மறைந்த மூத்த பத்திரிகையாளர் கதிர்வேற்பிள்ளை அஞ்சலி செலுத்திய போது


இலங்கைப் போரில் இடம்பெற்ற போர்க் குற்றங்களில் மிகவும் மோசமானதாகக் குறிப்பிடப்படுவது சரணடைவதற்குத் தயாராக வெள்ளைக் கொடிகளுடன் வந்த விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களான பா.நடேசன், சி.புலித்தேவன் ஆகியோர் கொல்லப்பட்டதே.
இதனை இலங்கை அரசாங்கம் மறுத்தாலும், இவ்வாறான சம்வம் ஒன்று இடம்பெற்றது என்பதற்கான உறுதியான சாட்சியாகக் கருதப்பட்ட பிரபல ஊடகவியலாளரும், புகைப்படப்பிடிப்பாளருமான மேரி கொல்வின் சிரியாவில் இடம்பெற்றும் போரில்
கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கின்றார்.

இலங்கையில் சிறிலங்கா அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் தொடர்பான செய்திகளைச் சேகரிப்பதில் கள முனை அனுபவத்தைக் கொண்டிருந்த மேரி கொல்வின் சிரியாவில் இடம்பெறும் போர் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கச் சென்றிருந்த வேளையில் அந்நாட்டு அரச படைகளின் எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகிக் கொல்லப்பட்டுள்ளார்.

அவருடன் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புகைப்பட நிபுணர் ரெமி ஒச்லிக் என்பவரும் கொல்லப்பட்டுள்ளார்.

இதனைவிட மேலும் பலர் படுகாயமடைந்திருக்கின்றார்கள்.சிரியாவின் மூன்றாவது பெரிய நகரான ஹோம்ஸ் நகரின் பாபா அமர் பிரதேசத்தில் செயற்பட்டுவந்த தற்காலிக ஊடக மையத்தின் மீது எறிகணைத் தாக்குதல் நடந்தபோது மேலும் பலரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாபா அமர் என்கிற பகுதியில் இந்த இரண்டு ஊடகவியலாளர்கள் தங்கியிருந்த வீடு, அரச எதிர்ப்பாளர்களின் தற்காலிக ஊடக மையமாக செயற்பட்டுவந்தது. புதன் கிழமை காலை இந்த கட்டிடத்தின்மீது எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து அந்த கட்டிடத்திலிருந்தவர்கள் வெளியே ஓடியபோது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் சடலங்களை காட்டும் காணொளி வெளியிடப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. மேலும் குறைந்தது மூன்று வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் காயமடைந்திருப்பதாகவும் அரச எதிர்ப்பாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் சட்டவிரோதமான முறையிலேயே குறிப்பிட்ட பகுதிக்குச் சென்றிருந்தமையால் அவர்களது சடலங்களை மீட்கும் முயற்சிகள் உடனடியாக வெற்றிபெற வில்லை.

போர்ச் செய்திகளைச் சேகரிப்பதில் ஆர்வம் காட்டிய மேரி கொல்வின், 2001 ஆம் ஆண்டில் இலங்கையின் வடபகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு நுளைந்த போது சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்ததுடன் தன்னுடைய இடது கண்ணையும் இழந்தார்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த வடபகுதிக்கு ஊடகவியலாளர்கள் செல்வது அப்போது இலங்கை அரசால் தடைசெய்யப்பட்டிருந்தது.

இருந்தபோதிலும் கொழும்பு வந்த கொல்வின் இலங்கைப் படைகளுக்குத் தெரியாத வகையில் வன்னிப் பகுதிக்குள் நுளைந்திருந்தார்.

இருந்தபோதிலும் விடுதலைப் புலிகளின் பாதுகாப்புடன் அவர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குத் திரும்பிய போதே இலங்கைப் படையினரின் தாக்குதலுக்கு உள்ளானார்.

இலங்கைப் படையினர் வீசிய கைக்குண்டு ஒன்று அவருக்கு அருகில் வெடித்தபோது அவரது கண் மோசமாகப் பாதிக்கப்பட்டது.

இலங்கைப் படையினரால் மீட்கப்பட்டு கொழும்புக்குக் கொண்டுவரப்பட்ட அவரது கண்ணைப் பாதுகாப்பதற்கு மருத்துவர்களால் முடியவில்லை.

தன்னுடைய கண் ஒன்றைப் போர்ச் செய்திகளைச் சேகரிப்பதற்காகச் சென்ற போது இழந்த போதிலும், தன்னுடைய ஆர்வத்தை அவர் விட்டுவிடவில்லை.

இதன்பின்னர் 2009 மே மாதம் இடம்பெற்ற இறுதிப் போர் தொடர்பான செய்திகளைச் சேகரிப்பதற்காக முல்லைத்தீவு சென்றிருந்த இவரது பெயர்வெள்ளைக்கொடி வழக்கிலும் பிரபலமாகப் பேசப்பட்டது.

விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களுடன் தொடர்புகளை வைத்திருந்த இவர், இறுதிப்போரின் போது புலிகளின் முக்கிய தலைவர்கள் சரணடைவது தொடர்பான பேச்சுக்களை ஐ.நா. அதிகாரியான விஜய் நம்பியார் மற்றும் இலங்கை அரச தலைவர்களுடன் நடத்தியிருந்தார். விடுதலைப் புலிகளின் தலைவர்கள் வெள்ளைக் கொடிகளுடன் வந்து சரணடைந்தால் அவர்களுக்குப் பாதுகாப்பளிக்கப்படும் என விஜய் நம்பியார் வழங்கிய வாக்குறுதியை நடேசனுக்கு இவரே தெரியப்படுத்தியிருந்தார்.

இவை தொடர்பாக லன்டன் சன்டே ரைம்ஸ் பத்திரிகையில் விரிவான கட்டுரை ஒன்றை இவர் எழுதியிருந்தார்.அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளரான இவர், பிரித்தானியாவின் பிரபல பத்திரிகைபயான சன்டே ரைம்ஸ் பத்திரிகைக்காகச் செய்தி சேகரிக்கச் சென்றிருந்த போதே கொல்லப்பட்டுள்ளார்.

லண்டன் பி.பி.சி. தொலைக்காட்சிக்கு இறுதியாக அனுப்பிவைத்திருந்த செய்தியில் ஹொம்ஸ் நகர் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்டுவரும் எறிகணைத் தாக்குதல்கள் தொடர்பான விரிவான அறிக்கை ஒன்றை மேரி கொல்வின் கொடுத்திருந்தார். இந்த அறிக்கை வெளியாகி சுமார் 12 மணி நேரத்துக்குள் எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகி அவரும் செய்தியாகிவிட்டார்.

அவர் கொல்லப்பட்டிருப்பது பிரித்தானிய ஊடகத்துறையினரை அதிரவைத்துள்ளது.

போர் இடம்பெற்ற பல நாடுகளிலும் துணிச்சலுடன் சென்று செய்தி சேகரிப்பதில் மேரி கொல்வின் நிறைந்த அனுபவத்தைக் கொண்டவர். குறிப்பாக இலங்கை, செச்னியா, கொசோவோ போன்ற பகுதிகளில் துணிச்சலுடன் நுளைந்து செய்திகளைச் சேகரிப்பதில் இவர் ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

கடந்த மார்ச் மாதம் சிரிய அதிபர் பஷர் அல் அசாத்த்துக்கு எதிரான கிளர்ச்சி ஆரம்பித்தது முதல் மேற்குலக செய்தியாளர்கள் சிரியாவுக்குள் பெரும்பாலும் அனுமதிக்கப்படுவதில்லை.

ஆனாலும் அரச எதிர்ப்பு செயற்பாட்டாளர்களின் துணையுடன் பெரும் ஆபத்துக்களுக்கு மத்தியில் செய்தியாளர்கள் அங்கே சென்றபடி இருக்கிறார்கள். பிரஞ்சு நாட்டின் தொலைக்காட்சி ஊடகவியலாளர் கில்லிஸ் ஜாக்குயர், சிரிய அரசு ஏற்பாடு செய்திருந்த பயணத்தில் ஹோம்ஸ் நகருக்கு சென்றபோது கொல்லப்பட்டார்.

நாற்பது பேர் கொல்லப்பட்டதாக அரச எதிர்ப்பு
ஆர்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

அப்படி கொல்லப்பட்டவர்களில் ஹோம்ஸ் நகரிலிருந்து நேரடி காணொளியை ஒலிபரப்பிவந்த ரமி அல் சயத் என்பவரும் அடக்கம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். அவரது காணொளி காட்சிகளை தான் உலக ஊடக நிறுவனங்கள் பலவும் பயன்படுத்திவந்தன

.பாபா அம்ர் பகுதியில் நடந்த ஷெல் தாக்குதலில் சையீத் கொல்லப்பட்டதாக அவரது சகோதரர் தெரிவித்திருக்கிறார்.

தற்காலிக மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சையீத்தின் சடலத்தை காட்டும் காணொளியையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.
.
தமிழின அழிப்பில் ஐநாவின் பங்கை உலகறிய செய்த நேரடி சாட்சியும் “வெள்ளைக்கொடி” விவகாரத்தின் அனைத்துலக சாட்சியுமான #மேரி #கொல்வின் அம்மையாரை தமிழினம் இழந்து இன்றுடன் 6 வருடங்கள்…

ஐநா உட்பட பலர் தமிழின அழிப்பில் பங்கேற்றதை புலிகளின் தகவல்களினூடாக மற்றும் வேறு பல ஆதாரங்களுடன் அறிந்த தமிழ்ச்சூழலுக்கு வெளியே உள்ள மிகச் சிலரில் ஒருவர் அவர்.

“#வெள்ளைக்கொடி” விவகாரம் எனப்படும் #போர்க்குற்றத்தின் மிக முக்கியமான ஒரு சாட்சி அவர். அவர் சிரியாவில் கொல்லப்பட்டதை நாம் தமிழின அழிப்பின் ஒரு தொடர்ச்சியாகவே பார்க்க வேண்டும். ஏனென்றால் அவர் அழிக்கப்பட வேண்டிய தேவை #ஐநா உட்பட பலருக்கு இருந்தது

எமது மக்களின் துயரத்தை உலகத்தின் கண்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய உத்தமமான ஊடகவியலாளரை இழந்துள்ளோம்

தன் ஒரு விழியை இழந்தாலும் மறு விழி வெளிச்சத்துடன் உலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் மேரி கொல்வின் அம்மையாரின் 6 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று