Breaking

Sunday, 18 February 2018

கைப் பையில் இருந்த ரி- 56 ரக துப்பாக்கி ரவைகள் !

வவுனியா வடக்கு நெடுங்கேணியில் நேற்று முன்தினம் இரவு 7மணியளவில் கடமையிலிருந்த போக்குவரத்துப் பொலிஸாரின் சோதனையின்போது கைப்
பையில் மறைத்துக் கொண்டுசெல்லப்பட்ட ரி- 56 ரக துப்பாக்கியின் 611 ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதைக் கொண்டு சென்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று வவுனியாப் பொலிஸார் தெரிவித்தனர்.
அவரது வீட்டுக்கு சந்தேகத்தின் அடிப்படையில் சென்ற பொலிஸார் அங்கு சோதனை நடவடிக்கை மேற்கொண்டபோது சட்டவிரோத இடியன் கட்டுத்துவக்கு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா வடக்கு நெடுங்கேணி மாறாயிலுப்பை நாகதம்பிரான் கோவிலடிப்பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் வீதியால் மோட்டார் சைக்கிலில் சென்ற ஒருவரிடம் போக்குவரத்துப் பொலிசார் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர். அவரிடம் இருந்த கைப் பை ஒன்றும் சோதனையிடப்பட்டது.அதில் ரி-56 ரக துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் 611 ரவைகள் காணப்பட்டன. அவை கைப்பற்றப்பட்டன. சந்தேக நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அவருடைய வீடு சோதனைக்குட்படுத்தப்பட்டது.
இதன் போது அங்கு இடியன் துவக்கு மீட்டக்கப்பட்டது. அதற்கான வெடி மருந்து தயாரிக்கவே ரி-56 துப்பாக்கி ரவைகள் எடுத்துச் செய்லப்பட்டன என்று வஜசாரணைகளில் தெரியவந்துள்ளது. துப்பாக்கி ரவைகள் எங்கிருந்து பெறப்பட்டன என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.