Breaking

Monday, 19 February 2018

சிவனொளிபாத மலையினை தரிசிப்பதற்காக சென்ற 27 பக்தர்கள் மோப்ப நாயால் மாட்டி!

சிவனொளிபாத மலையினை தரிசிப்பதற்காக சென்ற 27 பக்தர்கள் மோப்ப நாயால் மாட்டிக் கொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.


ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினரால் நேற்றிரவு “கோரா” என்ற மோப்ப நாயின் உதவியுடன் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த 27 பேரிடமும் இருந்து கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இதனையடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிவனொளிபாத மலையினை தரிசிப்பதற்காக சென்ற பிலியந்தலை, கெஸ்பேவ, களுத்துறை, ஹோமாகம மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களிடமிருந்தே போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது 8 மில்லிகிராம் ஹெரோயினும், 59750 மில்லிகிராம் கஞ்சாவுமே கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.