Breaking

Tuesday, 16 January 2018

கிளிநொச்சியில் மஞ்சல் விரட்டு பாரம்பாரிய விளையாட்டு நிகழ்வு!

ஜல்லிக் கட்டு போன்று மஞ்சல் விரட்டு பாரம்பாரிய விளையாட்டு நிகழ்வொன்று கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த கால
போருக்கு முன்னா் பல கிராமங்களில் மஞ்சல் விரட்டு விளையாட்டு இடம்பெற்று வந்தது. உழவர் திருநாளான பொங்கல் தினத்தை முன்னிட்டு இடம்பெறுகின்ற மஞ்சல் விரட்டு இவ்வருடம் மீண்டும் கிளிநொச்சி பெரியபரந்தன் பிரதேச இளைஞர்களால் நடத்தப்பட்டது. தாங்கள் வளர்க்கும் மாடுகளில் தெரிவு செய்யப்பட்ட ஒன்றின் கழுத்தில் துணி ஒன்றில் பணம் அல்லது பிடிக்கப்படும் மாட்டின் உரிமையாளரால் தனது மாட்டை பிடித்து கழுத்தில் கட்டப்பட்ட துணியை கழற்றினால் இவ்வளவு தொகை பரிசு என அறிவிக்கப்பட்டு மாடுகள் வெடிகொளுத்தி விரட்டப்படும். விரட்டப்படும் மாடுகளை இளைஞர்கள் மடக்கி பிடிக்க வேண்டும் இதுவே மஞ்சல் விரட்டு விளையாட்டாக இருந்து வருகிறது. இதில் பல இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்தனர்.