Breaking

Thursday, 18 January 2018

நைஜூரியாவில் தீவிரவாதத் தாக்குதல்..!

நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் உயரிழந்தனர்.

ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் குழு இயங்கி வருகின்றது. நைஜீரியா மட்டுமல்லாது அண்டை நாடுகளிலும் இந்தக் குழு பல்வேறு தாக்குதல்களை நடத்தி உள்ளது. இந்நிலையில், நைஜீரியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள மைதுகுரி பகுதியில் உள்ள மார்கெட்டில் நேற்று இரண்டு தீவிரவாதிகள் தங்களது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தனர்.
இந்தக் கோர தாக்குதலில் 12 பேர் உடல் சிதறி பலியாகியுள்ளனர். 48 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.