Breaking

Thursday, 18 January 2018

அரசியலில் பெண்களது வருகை யாழ் மாநகர சபையின் பிரதான பெண் வேப்பாளர் லதா கோடிஸ்வரன்!

தமிழ் தேசிய அரசியலில் பெண்களது வருகை மிகமுக்கியத்துவமான தேவைகளை தோற்றுவித்திருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் யாழ்.மாநகரசபை தேர்தலில் போட்டியிடும் லதா கோடீஸ்வரன்
யாழ்.ஊடக அமையத்தில் இன்று

வியாழக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டார். மேலும் கருத்து தெருவிக்கையில். உள்ளுர்ராச்சி சபை தேர்தல் ஆனது மக்களின் ஆதரவு நிறைய உண்டு என்பது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.கடந்த காலங்களில் நாங்கள் போர் சூழலில் இருந்து மீண்டு நிறைய துண்பங்களையும் பாடுகளுயும் சுமந்து வந்திருக்கிறோம்.ஆகவே அடி மட்ட ரீதியான கிராமிய மக்களின் பிரச்சனைகள் வாழ்வாதார பிரச்சனைகள் அவர்களுடைய பின்னடைவை முன்னோக்கி நகர்த்துவது தொடர்பான எண்ணங்கள் சிந்தனைகள் எல்லாம் எங்களுக்கு தெரியும்.கிராமிய அபிவிருத்தி மேற்கொள்வது கடுமையான முயற்ச்சி எடுக்கிறோம்.இந்த உள்ளுராச்சி தேர்தல் சமூகத்தில் சிறிய அலகான கிராமத்தின் அபிவிருத்தியை நோக்கிய நகர்வாக கிராமம் அபிவிருத்தியடைந்தால் நகரங்கள் மேன்மையடையும் .நகரங்கள் மேன்மையடைந்தால் நாடு மேண்மையடையும்.