Breaking

Wednesday, 10 January 2018

தயா மாஸ்டர் மீது நடாத்தப்பட்ட தாக்குதலுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி மிக வன்மையாக கண்டிக்கின்றது!

டான் ரீவி அலுவலகத்திற்குள் புகுந்து தயா மாஸ்டர் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் மிக வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது. இது ஊடக சுதந்திரத்திற்கு விழுந்த மிகப்பெரிய அடி. வெளியாகியிருக்கும்
கானொளியை பார்க்கும் போது இது நன்கு திட்டமிட்ட தாக்குதல் போல் தோன்றுகின்றது. எத்தகைய மருத்துவ சான்றுகளும் இன்றி தாக்குதலாளி மன நோயாளி என கூறப்படும் செயதிகளின் நம்பக தன்மை கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியது. இச்சம்பவத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணி மிக வன்மையாக கண்டிக்கின்றது.