Breaking

Tuesday, 19 December 2017

கண்ணகிபுரம் கிராமத்தில் செமட்ட செவன வீடமைப்பு பகுதி மழை காலங்களில் குளம் காட்ச்சி!

செமட்ட செவன வீடமைப்பு திட்டத்தின் ஊடாக கண்ணகிபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள 25 வீடுகளைக் கொண்ட வீடமைப்பு பகுதி மழை காலங்களில் குளம்
போன்று காட்சியளிக்கின்றது. அரச காணி என்பதால் இத்திட்டத்திற்கான வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டு 25 வீடுகளைக் கொண்ட வீடமைப்பு கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது. எனினும், இன்னும் மக்களிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்படவில்லை என மக்கள் கூறியுள்ளனர்.இதேவேளை, தற்போது பெய்யும் மழை காரணமாக இக்கிராமம் நீர் நிறைந்த கிராமமாக காணப்படுவதுடன், நீர் தேங்கி காணப்படுவதால் டெங்கு நோய் பரவக் கூடிய சூழ்நிலை காணப்படுவதாகவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இக்கிராமத்தில் காணப்படும் வீதிகளில் மின் விளக்குகள் பொருத்தப்படாமல் இருப்பதாகவும் பிரதேச சபை செயலாளர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.