Breaking

Tuesday, 19 December 2017

கிளிநொச்சி - இராமநாதபுரம் பகுதியில் விடுதலைப்புலிகளின் சில இறுவட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம்

கிளிநொச்சி - இராமநாதபுரம் பகுதியில் விடுதலைப்புலிகளின் முகாம் இருந்த இடத்தில் சில இறுவட்டுக்கள்
மீட்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதில், தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் வீரத்தை பிரதிபலிக்கக் கூடிய இறுவட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளதாக இராமநாதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி - இராமநாதபுரம் பகுதியை மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்ட நிலையில், அங்கு வீடு கட்டுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனஇதன்போது, பாதுகாப்பான கொள்கலன் ஒன்றிலிருந்து 91 இறுவட்டுக்களும், 61 பாதுகாப்பு உறைகளும் மீட்கப்பட்டுள்ளன.