Breaking

Tuesday, 12 December 2017

வவுனியாவில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுப் பணத்தை செலுத்தியது!

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் இன்றை தினம் உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுப் பணத்தை செலுத்தியது.
இன்று பகல் இரண்டு மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்தில் வவுனியா
மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தினை செலுத்தியது. ஔஉனியா நகரம்,வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை,வெண்கலச் செட்டி குளம் போன்ற சபைகளுக்கான கட்டுப் பணத்தினை செலுத்தியது.
வவுனியா மாவட்ட முகவரான கோபாலராசா கேசவன் மற்றும் அமைப்பாளர் ஜெ.மயூரசர்மா ஊடக பேச்சாளர் தனுஸ்காந் ஆகியோர் கட்சியின் சார்பாக கட்டுப் பணத்தை செலுத்தியதோடு அனைத்து இடங்களுக்குமான வேட்பாளர்கள் தெரிவுகள் நடை பெற்ற வண்ணம் உள்ளதாகவும் அனேகமான இடங்களில் தமது ஆதரவுகளை மக்கள் தெரிவித்து பூரண ஒத்துழைப்பினை வழங்க முடிவெடுத்துள்ளமை தங்களுக்கு வெற்றியய தரும் என்று எமது ஊடகப் பிரிவுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.