Breaking

Wednesday, 6 December 2017

''தமிழ்த் தேசிய பேரவை''தேசியக் கொள்கையாக முன்னிறுத்தி ஓர் அரசியற் பேரியக்கமாக உருவாக்கம்!

தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் வேணவாவை வென்றெடுப்பதையும் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட
அநீதிகளுக்கு நீதி காண்பதையும் இலக்காக கொண்டு தமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட அரசியல் வரைபினை தேசியக் கொள்கையாக முன்னிறுத்தி அகில இலங்கை தமிழக் காங்கிரஸ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் சம உரிமை இயக்கம் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து இதய சுத்தியுடன் செயற்படும் ஓர் அரசியற் பேரியக்கமாக இவ் அமைப்பு உருவாக்கப்படுகிறது.

தமிழ் மக்கள் பேரவையினால் 10.04.2016 ஆந் திகதி வெளியிடப்பட்ட தீர்வுத்திட்டத்தை வென்றெடுப்பதையும், தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு முழுமையான நீதியை பெற்றுக்கொள்வதையும் இலக்காக கொண்டு இவ் அரசியற் பேரியக்கம் (தமிழ்த் தேசிய பேரவை) செயற்படும்.