Breaking

Monday, 18 December 2017

கிளிநொச்சி ஆணையிரவு பகுதியில் இருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி, ஆணையிரவு, தட்டுவன் கொட்டிப் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) மாலை மோட்டார் சைக்கிள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி
விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதியில், கிளிநொச்சியில் இருந்த யாழ்ப்பாணம் நோக்கி சென்ற மோட்டர் சைக்கிள் ஒன்றும் யாழ்ப்பாணம் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியே இந்த விபத்து சம்பவத்துள்ளது. இந்த விபத்தில் சிக்கிய படுகாயமடைந்த மேலும் இருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த இருவரின் சடலங்களும் கிளிநொச்சி வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த இருவருள் ஒருவர் கிளிநொச்சி ஆணையிரவு, தட்டுவன் கொட்டிப் பகுதியை சேர்ந்தவர் எனவும் மற்றையவர் யாழ்ப்பாணம் கரவெட்டியை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கிளிநொச்சியில் இடம்பெற்ற இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கி படுகாயமடைந்த மூவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.