Breaking

Sunday, 26 November 2017

வாகரை கண்டலடி துயிலுமில்லம் மாவீரர் நாளை நினைவு கூரத் தயாராகின்றது!

வாகரை கண்டலடி துயிலும் இல்லத்தில் சுமார் 1500 இற்கு மேற்பட்ட
வித்துடல்கள் விதைக்கப்பட்டுள்ளன. இவர்கள் எம் இனத்தின் காவல்தெய்வங்கள். இவர்கள் சுமந்த கனவுகளில் ஒரு தேசம் தெரிகின்றது. அவர் மண்ணினுள் புதைந்து போன பின்பும் வீரவாழ்வு தொடர்கின்றது. வாகரைப்பிரதேச இழைஞர்களும் மற்றும் மக்களும் மழையென்றும் பாராது மிகவும் சுறுசுறுப்பாக செயற்பட்டு இரவு பகலாக விளக்கேற்றலுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.